இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் கேப்டன்சியில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாக, இந்திய வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், திட்டங்களை சரியாக கடைபிடித்தால் தேவையான முடிவுகள் கிடைக்கும் என, தோனி கூறியதை மனதில் வைத்து கடைபிடிப்பதாக பண்ட் தெரிவித்துள்ளார். மேலும் அணியில் இருக்கும் வீரர்கள் மீது எப்படி அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை, ரோகித் சர்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டதாகவும் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.