தனது புகைப்படத்தை வைத்து மோசடி முயற்சி நடைபெற்று வருவதாக, நடிகர் ராஜ்கிரண் தெரிவித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "கனடா செல்வம்" என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர், தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி, ஒரு தயாரிப்பாளரை ஏமாற்ற முயன்றிருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார். அவ்வாறு தன்னுடைய பெயரையோ, புகைப்படைத்தையோ காட்டி யாரும் தொடர்பு கொண்டால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் நடிகர் ராஜ்கிரண் கேட்டுக் கொண்டுள்ளார்.