Rajini | Goa | "100 ஜென்மங்கள் எடுத்தாலும்; ரஜினியாகவே பிறக்க ஆசை.." ரஜினி நெகிழ்ச்சி
திரைத்துறையில் 50 ஆண்டுகளை கடந்த நடிகர் ரஜினிகாந்த்திற்கு கோவா திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் 1975 ஆம் ஆண்டு வெளியான ’அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமானார். பல கதாப்பாத்திரங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அவர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரானார்.
காலப்போக்கில் அவரது ஸ்டைல் மற்றும் தனித்துவமான நடிப்பால் 'சூப்பர் ஸ்டார்' அந்தஸ்தை அடைந்தார்...
50 ஆண்டுகாலம் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் ரஜினிக்கு, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், “நூறு ஜென்மங்கள் எடுத்தாலும் நடிகனாகவும், ரஜினிகாந்தாகவும் பிறக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.