நடிகை ராதிகா தாயார் மறைவுக்கு நேரில் வந்த VVIP-க்கள்
மறைந்த நடிகர் M.R.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயுமான கீதா ராதாவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அஞ்சலி செலுத்தினர். போயஸ் கார்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த அவரின் உடலுக்கு கி.வீரமணி, ஜி.கே.வாசன், வானதி சீனிவாசன், சீமான், சசிகலா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதேபோல பிரபு, நாசர், சிவக்குமார், பாக்கியராஜ், மீனா உள்ளிட்ட திரைத்துறையினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.