பாராட்டு மழையில் ராமின் `பறந்து போ' | Parandhu Po | Director Ram | Tamil Cinema

Update: 2025-02-07 02:57 GMT

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராமின் 'பறந்து போ' திரைப்படம் பாராட்டுக்களை குவித்தது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான 'பறந்து போ' படத்தின் முதல் உலக ப்ரத்யேக காட்சி 54-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நகைச்சுவையை மையமாக கொண்ட எளிமையான கதையமைப்புடன் உருவாகி இருக்கும் 'பறந்து போ' திரைப்படம், சர்வதேசப் பார்வையாளர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. படம் நெடுக கைதட்டியும் கரகோஷத்தை எழுப்பியும் உற்சாகத்துடன் பார்வையாளர்கள் படத்தை பார்த்து ரசித்தனர். 'பறந்து போ' திரைப்படம் கோடை விடுமறையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்