ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் - இயக்குநர் அட்லீ நடிகர் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து இயக்கும் புதிய படம், முற்றிலும் புதிய ஜானரில் உருவாகி வருதாக இயக்குநர் அட்லீ தெரிவித்தார். சமீபத்தில் பேட்டி அளித்த அவர், இந்த படத்திற்காக ஹாலிவுட் தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், ஆனால் அது அவர்களுக்கே பெரிய சவாலாக உள்ளதாகவும் கூறினார்.அதேபோல், காந்தாரா படத்தின் முதல் பாகத்தை காண ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து இரண்டரை மணி நேரம் பயணம் செய்து வந்ததாகவும், அப்பொழுதே ரிஷப் ஷெட்டியை அழைத்து பாராட்டியதாகவும் தெரிவித்தார். அவர் திரைத்துறைக்கே ஊக்கமாக திகழ்வதாகவும், அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்றும் அட்லீ விருப்பம் தெரிவித்தார்.