இயக்குநர் மிஷ்கின் அன்பின் உச்சத்தில் பேசுவதால், அவரை எந்த இடத்திலும் தவறாக பார்ப்பதில்லை என்று நடிகர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரு.மாணிக்கம் படத்தின் Thanks meet நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கினின் மேடைப்பேச்சு குறித்து பேசிய சமுத்திரக்கனி, மிஷ்கினை பற்றி தெரிந்தவர்களுக்கு அவர் பேசியது தவறில்லை என்பது தெரியும் என்றார். மேலும் மேடையில் மிஷ்கின் பேசியபோது கைதட்டி ரசித்துவிட்டு, பின்பு மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் என்றும் சமுத்திரக்கனி விமர்சித்துள்ளார்.