அத பாத்ததும் நெகிழ்ந்து போன மோகன்லால்... வாழ்க்கைல சில தருணங்கள வார்த்தைகளால விவரிக்க முடியாத அளவுக்கு ஆழமானது... அது என்னென்னைக்கும் உங்களோடயே இருக்கும்...இப்ப அப்படிப்பட்ட தருணங்கள்ல ஒன்ன நான் அனுபவிச்சேன்.. நான் மெதுவா அந்த கிஃப்ட்ட ஓப்பன் பண்ணப்போ என் ஹார்ட் பீட்டே ஒரு செகன்ட் நின்னுருச்சு...ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கையெழுத்து போட்ட ஜெர்சி...என்னோட பேர அவரே எழுதிருக்காரு... அப்டினு ஒரு சின்னக் குழந்தை மாதிரி பூரிச்சு போயிட்டாரு மோகன்லால்...