அஞ்சு வண்ண பூவே... க்யூட்டாக பாடிய கார்த்திக் நேத்தாவின் மகன்
அஞ்சு வண்ண பூவே பாடலை, கார்த்திக் நேத்தாவின் மகன் பாடியுள்ள வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகின்றது. கமல்ஹாசன் சிம்பு நடிப்பில் வெளியான படம் தக் லைப் . இப்படத்தில் இடம்பெற்ற கவிஞர் கார்த்திக் நேத்தா எழுதிய அஞ்சு வண்ண பூவே பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இப்பாடல் பரவலாக பேசப்பட்ட நிலையில், கார்த்திக் நேத்தாவின் மகன் அப் பாடலை, மழலை மொழியில் க்யூட்டாக பாடிய வீடியோ இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.