Lubber Pandhu|`லப்பர் பந்து’ டைரக்டர் இணையும் உச்ச நட்சத்திரத்துடன் ..ஒரே அறிவிப்பில் ஸ்டன்னான கோலிவுட்

Update: 2025-09-21 05:23 GMT

தனுஷ் உடன் இணையும் லப்பர் பந்து இயக்குநர்

லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி ஒராண்டை நிறைவு செய்ததை ஒட்டி, அந்த படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து சமூக வலைத்தளத்தில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அதில் அவர் தன்னால் சினிமாவிற்கு செல்ல முடியுமா? சென்றாலும் படம் எடுக்க முடியுமா?எனவும், அப்படியே படம் எடுத்தாலும் தன்னையும் எடிட்டரையும் தவிர மற்றவர்களால் அந்த படத்தை முழுதாக பார்க்க முடியுமா உள்ளிட்ட பல கேள்விகள் தன்னிடம் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் லப்பர் பந்து படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு இவை அனைத்திற்கும் பதில் அளித்ததாக தெரிவித்த அவர், தனது அடுத்த படம் நடிகர் தனுஷை வைத்து இயக்கவுள்ளதாக அறிவித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்