Kollywood | silksmitha | கோலிவுட்டின் இருண்ட நாள்.. இன்னைக்கு என்ன தினம்னு தெரியுமா?

Update: 2025-09-23 10:52 GMT

“காந்தக் கண்ணழகி“ சில்க் ஸ்மிதாவின் நினைவு தினம்

1980களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ரசிகர்களின் கனவுக்கன்னி சில்க் ஸ்மிதாவின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது... இயற்கையான அழகு...கவர்ந்திழுக்கும் காந்தக் கண்களுக்கு சொந்தக்காரர் நடிகை சில்க் ஸ்மிதா.. 1979ல் வண்டிச்சக்கரம் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார் சில்க் ஸ்மிதா... மூன்றாம் பிறை, ரங்கா, சகலகலா வல்லவன், மூன்று முகம், கோழி கூவுது உள்ளிட்டவை சில்க்கின் பேர் சொல்லும் படங்கள்... குணச்சித்திர வேடங்களிலும் நடித்து...கவர்ச்சிக்கு மட்டுமே சில்க் ஸ்மிதா என பேசியவர்களின் வாயடைக்க வைத்தார்... தெற்கின் ராணி இம்மண்ணை விட்டு மறைந்து 29 வருடங்கள் ஆனாலும் ரசிகர்கள் மனதை விட்டு என்றும் அகலாத சிலுக்காக என்றென்றும் நிலைத்திருப்பார்...

Tags:    

மேலும் செய்திகள்