Kantar Chapter 1 | Rishab Shetty | காந்தாரா டிரெய்லரை விட்ட முதல் நாளிலே ரிஷப் ஷெட்டிக்கு அதிர்ச்சி
“காந்தாரா சாப்டர் 1“- சர்ச்சையான போலி போஸ்டர் குறித்து ரிஷப் ஷெட்டி விளக்கம்
காந்தாரா சாப்டர் 1 படம் பற்றி வெளியான சர்ச்சைக்குரிய போலி போஸ்டர் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி... ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள கன்னட திரைப்படமான 'காந்தாரா சாப்டர் 1' என்ற படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் நிகழ்ச்சியின் போது ரிஷப் ஷெட்டி போலி போஸ்டர் குறித்து விளக்கம் கொடுத்தார். அதாவது, அந்த போலி போஸ்டரில் திரையரங்குகளில் காந்தாரா சாப்டர் 1-ஐப் பார்க்கும் வரை மது அருந்தாமல், புகைப்பிடிக்காமல், அசைவம் உண்ணாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு விளக்கம் கொடுத்த ரிஷப் ஷெட்டி, இதற்கும் இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது எனவும் விளக்கியுள்ளார்... மேலும் அந்த போலி போஸ்டர் தங்கள் கவனத்திற்கு வந்தபோது அதிர்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.