`யாராவது இருக்கீங்களா?’’ 4K தரத்தில் மீண்டும் இறங்கும் புதுப்பேட்டை - தேதி அறிவிப்பு
`யாராவது இருக்கீங்களா?’’ 4K தரத்தில் மீண்டும் இறங்கும் புதுப்பேட்டை - தேதி அறிவிப்பு
ஜூலை 26-ல் 4k தரத்தில் ரீ-ரிலீஸாகும் தனுஷின் 'புதுப்பேட்டை' படம்
இயக்குனர் செல்வராகவனோட இயக்கத்துல நடிகர் தனுஷ் நடிச்ச புதுப்பேட்டை படம், வர ஜூலை 26ஆம் தேதி ரொம்பவே புதுப்பொலிவோட 4K தரத்துல ரீ-ரிலீஸ் ஆக இருக்கு. நடிகர் தனுஷ்க்கு ஜூலை 28ஆம் தேதி, பிறந்தநாள் வர்ற சூழல்ல.. தனுஷோட பிறந்தநாள் ஸ்பெஷலா இந்தப் படம் ரீ-ரிலீஸ் ஆக இருக்கு. நடிகர் தனுஷ், நடிகைகள் சினேகா, சோனியா அகர்வால் அப்பிடினு பலர் நடிச்ச இந்த படம், 2006வது வருஷம் ரிலீஸ் ஆகி, 3 கோடி ரூபாய் வரைக்கும் வசூல்ல சாதனை படைச்சு இருந்துச்சு. இப்ப ரீ-ரிலீஸ் பத்துன அதிகாரப்பூர்வ அறிவிப்ப இயக்குனர் செல்வராகவன் வெளியிட்ட நிலையில.. இது ரசிகர்கள் மத்தில ரொம்ப எதிர்பார்ப்ப ஏற்படுத்தி இருக்கு.