கோவை தமிழ் மிகவும் பிடிக்கும் - நடிகை கீர்த்தி ஷெட்டி
கோவை தமிழ் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கீர்த்தி ஷெட்டி தெரிவித்துள்ளார். ஸ்டார்ஸ் நைட் அவுட் ( stars night out) எனும் கலை நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை கீர்த்தி ஷெட்டி, நேரடித் தமிழ் படங்களில் நடித்து வருவதாகவும் அந்தப் படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவை தருவார்கள் என்று நம்புவதாகவும் கூறினார்.