தெலுங்கு திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் நடிகர் என்ற பெருமையையும், சாதனையையும் படைத்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலகிருஷ்ணாவின் சாதனையை பாராட்டி, ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு World Book of Records விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணாவை வாழ்த்தி ரஜினி வெளியிட்ட வீடியோ ஒளிபரப்பு செய்யப்படது. அதில், பாலய்யா என்றால் பாசிடிவிட்டி, எனர்ஜி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வாழ்த்தை பெரிய திரையில் பார்த்ததும் பாலய்யா எமோஷனலாகிவிட்டார்.