பராசக்தி படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக, அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா, பேசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் பொங்கல் ரிலீஸாக திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் "பராசக்தி படத்தின் பாடல்களை யார் பாடி இருப்பார் என யூகியுங்கள்..." என்று, படத்தின் இசையமப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இணையத்தில் பதிவிட்டு உள்ளார்.