`பேட் கேர்ள்' பட டீசரை நீக்க நீதிமன்றம் உத்தரவு

Update: 2025-07-19 07:59 GMT

பேட் கேர்ள் (Bad Girl) படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டது. பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் யூடியூபில் வெளியானது. இந்த டீசரில் சிறுவர் சிறுமியர் ஆபாசமாக இருக்கும் காட்சிகள் உள்ளன. ஆகவே இது குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் எனக்கூறி, சமூக ஊடகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என மதுரையை சேர்ந்த மூவர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதனை விசாரித்த நீதிபதி உத்தரவு நகல் கிடைத்த ஒரு மாதத்தில், டீசரை நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்