Coolie || "நான் எடுத்த மிக பெரிய தவறான முடிவு" `கூலி' அமீர்கான் பளிச்

Update: 2025-09-13 12:33 GMT

கூலி திரைப்படத்தில் ரஜினி, நாகார்ஜூனா, சவுபின், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். தாஹா எனும் கெஸ்ட் ரோலில் நடித்த ஆமீர் கானின் கதாபாத்திரம், நல்ல வரவேற்பு கிடைக்காமல், விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் “கூலி படத்தில் நடித்தது, தான் செய்த மிகப்பெரிய தவறு எனவும், அந்த கதாபாத்திரம் மிகவும் மோசமாக எழுதப்பட்டிருந்ததாகவும், ஆமீர் கான் கூறியதாக தகவல் வெளியானது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், தான் விரும்பியே அந்த கதாப்பாத்திரத்தில் நடித்ததாகவும், ரஜினிக்காக கூலியில் நடித்தது, மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்