மறைந்த பாடகி பவதாரணியின் நினைவாக, 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை மட்டுமே கொண்ட இசைக்குழுவை தொடங்கப் போவதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பவதவாரணியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், இளையராஜாவின் குடும்பத்தினரும், திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, பவதாரணி இறப்பதற்கு ஓராண்டுக்கு முன், பெண்கள் மட்டுமே இசைக்குழுவை தொடங்க வேண்டும் என விரும்பியதாக கூறினார்.