நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரிட் ஷைன் மீதான மோசடி வழக்கில், இருவர் மீதான நடவடிக்கைக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஷம்னாஸ் என்பவர்
ஆக்ஷன் ஹீரோ பிஜு 2 எனும் மலையாள படத்தின் தயாரிப்பு தொடர்பாக, தன்னிடம் பணத்தை வாங்கி மோசடி செய்ததாக நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரிட் ஷைன் ஆகியோர் மீது புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நிவின் பாலி மற்றும் அப்ரிட் ஷைன் ஆகிய இருவரும் தங்கள் மீதான மோசடி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டது.