தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் வீடியோ வெளியிட்ட நடிகர் ஷாருக்கான்
தேசிய விருது கிடைத்தது குறித்து நடிகர் ஷாருக்கான் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி மற்றும் நன்றி தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்திலான ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய 33 வருட சினிமா பயணத்தில் ஷாருக்கான் பெறும் முதல் தேசிய விருது என்பதால் அவர் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அதன்படி, தேசிய விருது என்பது வெறும் ஒரு சாதனை அல்ல. இது நான் செய்யும் செயல் முக்கியமானது என்பதற்கான நினைவூட்டல் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இயக்குனர் அட்லி, தேசிய விருது தேர்வுக்குழு, குடும்பத்தார் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்துள்ளார்.