Arya Sayyeshaa | ஆர்யாவின் மனைவி சாயிஷா போட்ட கமெண்ட் - தீயாய் பரப்பும் நெட்டிசன்கள்
தமிழ் சினிமாவின் ஷாம்மிங் நடிகராக வலம் வரும் ஆர்யா சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படத்திற்கு, "பொண்டாட்டியின் பேச்சை கேளுங்கள்" என அவரது மனைவி சாயிஷா கமெண்ட் செய்து கலாய்த்துள்ளார். நடிகர் ஆர்யா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, "உங்களுக்கு சந்தேகம் வரும் பொழுது அதற்கான சிறந்த இடம் gym" என பதிவிட்டு இருந்தார். அதற்கு “உங்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் பொண்டாட்டியின் பேச்சை கேளுங்கள்“ என அவரது மனைவி சாயிஷா கமெண்ட் செய்தது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது