Actor Ajith Kumar | தீயாய் சுற்றும் அஜித்தின் `நியூ கிளிக்ஸ்’... அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா
இணையத்தில் பரவும் அஜித்தின் புது புகைப்படங்கள்
கார் பந்தய வீரராக கலக்கும் முன்னணி நடிகர் அஜித்குமாரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கார் ரேஸ் டிராக்கில் அஜித் புகைப்படங்கள் எடுத்துள்ளார். புகைப்படத்தை பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள், அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தும் வருகிறார்கள். தற்போது கார் ரேஸில் முழு கவனம் செலுத்திய வரும் நடிகர் அஜித்குமார், இந்த வருட இறுதியில் அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்குவார் என தெரிகிறது.