Vijay Sethupathi | மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய் சேதுபதி - வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?
தனது மகனின் ப்ரமோஷன் வீடியோக்களை தங்கள் தரப்பில் இருந்து நீக்கும் படி சொல்லியிருந்தால், அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்த 'பீனிக்ஸ்' படம் திரை பிரபலங்களுக்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது படத்தை பார்த்து முடித்த பிறகு நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.
திரைப்படம் நன்றாக இருந்ததாகவும், தம் மகன் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என்றும் அவர் தெரிவித்தார்.