Actor Karthi | Shooting Accident | கார்த்தி பட ஷூட்டிங்கில் பேரதிர்ச்சி - உடல் நொறுங்கி ஒருவர் மரணம்
புதுக்கோட்டையில் நடிகர் கார்த்தியின் "மார்ஷல்" படத்தின் படப்பிடிப்பு தளத்தில், ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியிலிருந்து வந்த அய்யநாதன், தாம் தங்கியிருந்த திருமண மண்டபத்தின் மாடியில் இருந்து மதுபோதையில் தவறி விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது
உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.