``ரத்தம் உறிஞ்சும் காட்டேரிகள்'' - விட கூடாத வார்த்தையை விட்டு கதறும் அமெரிக்கா
ரத்தத்தை உறிஞ்சும் காட்டேரிகள் என பிரிக்ஸ் நாடுகளை விமர்சித்த அமெரிக்கா
பிரிக்ஸ் நாடுகளை ரத்தத்தை உறிஞ்சும் காட்டேரிகள் என வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...ரஷ்யாவுடனான இந்தியாவின் எண்ணெய் வர்த்தகத்தை கடுமையாக சாடி வரும் நவரோ, தற்போது இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளை குறிவைத்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், பிரிக்ஸ் நாடுகள் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளால் அமெரிக்காவின் ரத்தத்தை உறிஞ்சும் காட்டேரிகளை போல் இருப்பதாக சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். ஏற்கனவே இதேபோல் கடுமையான வார்த்தைகளை இந்தியா மீது நவரோ பிரயோகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.