- மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் கனவு திட்டமான ககன்யான்...விண்வெளிக்குச் சென்று பூமி திரும்பும் வீரர்களின் விண்கலன் (capsule) பாதுகாப்பாக தரையிறங்கும் வேகக் குறைப்பு சோதனையை வெற்றிகரமாக இஸ்ரோ மேற்கொண்டுள்ளது...
- டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது...அக்ஸர் படேல் துணை கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது...
- அசாம் மாநிலத்தில் 4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கவுகாத்தி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்...ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகளை கையாழும் வகையில் அமைக்கப்பட்ட புதிய முனையத்தை பார்வையிட்ட பிரதமர், அதன் திறன் குறித்து கேட்டறிந்தார்....
- சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று அணி தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்..15 பேரை தேர்ந்தெடுக்கும்போது யாரோ ஒருவரை தவறவிட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...
- மேற்குவங்க மாநிலம் ராணாகட் பகுதியில், பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டர் கடும் பனிமூட்டத்தால் தரையிறங்க முடியாததால் பரபரப்பு ஏற்பட்டது...எவ்வளவு முயன்றும் தரையிறங்க முடியாததால் மீண்டும் கொல்கத்தாவிற்கே திரும்பியது...
- டி-20 உலக கோப்பைக்கான அணியிலிருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார்...ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் அணியில் உள்ளனர்...
- வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி காங்கிரஸின் கொள்கையில் இல்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்...நாட்டில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் செய்த தவறுகளை சரிசெய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்...
- நீலகிரியில் இன்றும், நாளையும் உறைபனிக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
- கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பேக்கரிகளில் ஆய்வு நடத்த, தமிழக அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது...கேக்கில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது....
- புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, ஆனைக்கட்டி ரிசார்ட்டுகளில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்ப கூடாது...வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
- தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 99 ஆயிரத்து 200 ஆக விற்பனையாகி வருகிறது.ஒரு கிராம் ஆபரண தங்கம் 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில் நாளையும் நடைபெற உள்ளது..வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை காணொலி வாயிலாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்...வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது...
- தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் வாக்குறுதி அறிக்கை தொடர்பாக சென்னை, பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்..தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்...
- உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க கோருவதற்கு எதிர்ப்பு...பதவி நீக்க கோரும் நடவடிக்கைக்கு எதிராக மேலும் 36 நீதிபதிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்...
- அரசியல் களத்தில் இருக்கின்றோமா? இல்லையா? என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும் என பா.ஜ.கவிற்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்...பொங்கல் பண்டிகைக்கு பின் தவெகவின் திருப்புமுனை எப்படி அமைகிறது என்பதை கண்டு நாடே வியக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்...
- களத்தில் இல்லாத விஜய்க்கு, களத்தை பற்றி பேச தகுதியில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்...களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்ப்போம் என ஈரோட்டில் நடைபெற்ற பிரசாரத்தில் விஜய் பேசியிருந்த நிலையில் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்...