மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18.12.2025)

Update: 2025-12-18 12:55 GMT
  • 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற வகை செய்யும், விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது...எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது...
  • 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்...வேளாண் அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் மீது மசோதா நகலை கிழித்து எறிந்ததால் பரபரப்பு நிலவியது...
  • ஓமன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான The Order of Oman விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது...ஓமன் நாட்டின் சுல்தான் விருதை வழங்கினார்...
  • 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்...
  • வேளாண் அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் மீது மசோதா நகலை கிழித்து எறிந்ததால் பரபரப்பு நிலவியது...
  • புத்தாண்டு விடுமுறைக்கு பின் மாணவர்களுக்கு லேப்டாப் விநியோகம் செய்யப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...பிப்ரவரிக்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்...
  • திருப்பூரில், திருப்பூர் குமரன் நினைவகம் அருகே பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் தள்ளுமுள்ளு...பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்...
  • தேர்தல் வழக்கு விசாரணைக்காக முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினார்...2024 மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனியின் வெற்றி செல்லாது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், அவரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது..
  • ஈரோடு விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது...பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற நிலையில், பிரச்சார வாகனத்தில் இருந்து தொண்டர்களுடன் விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்டார்...
  • திமுக ஒரு தீய சக்தி எனக் கூறிய விஜய், தவெக ஒரு தூய சக்தி எனக் கூறினார்தீய சக்திக்கும், தூய சக்திக்கும் இடையே தான் போட்டி எனவும் விஜய் தெரிவித்தார்...
  • பெரியார் பெயரை சொல்லி கொள்ளை அடிப்பவர்கள் தான், தமது அரசியல் எதிரிகள் என விஜய் விளக்கம் அளித்தார்...களத்தில் இல்லாதவர்களை விமர்சிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்...
Tags:    

மேலும் செய்திகள்