மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10.12.2025) | 6 PM Headlines | ThanthiTV
- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து பெறுதல், பதிவு செய்தல் ஆகிய பணிகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது... வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 16-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது...
- தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக 15 துறைகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்...பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது...
- தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி, நாளை தொடங்கி ஜனவரி 24ம் தேதி வரை நடைபெறுகிறது... அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர்...
- SIR குறித்து தொடர்ந்து ஒருதலைபட்சமான பொய்கள் பரப்பப்படுவதாக, மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டினார்...SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் நலன்கள் பாதிக்கப்படுவதை ஒப்புக்கொள்வதாகவும், அவர்களுக்காக அனுதாபப்படுவதாகவும் தெரிவித்தார்...
- வாக்கு திருட்டு குறித்து விவாதம் நடத்த தயாரா? என மக்களவையில் அமித்ஷாவுக்கு ராகுல் சவால் விடுத்தார்... காங்கிரஸ் வெற்றி பெறும்போது தேர்தல் ஆணையம் மீது அவர்கள் பழி போடமாட்டார்கள் என அமித்ஷா பதலடி கொடுத்தார்
- திமுக சார்பில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி“ பரப்புரையை, சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது வாக்குச்சாவடியில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்... டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு வர நினைத்தால், தக்க பாடம் புகட்டப்படும் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்...
- அதிமுக பாஜக கூட்டணிக்கு ஒப்புதல் உட்பட 16 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன...கூட்டணி குறித்து முடிவெடுக்க ஈபிஎஸ்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது...
- 2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமையும் என அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்... அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்
- எடப்பாடி பழனிசாமியின் புலம்பலை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்... 2026 தேர்தலிலும் அதிமுகவுக்கு மக்கள் படுதோல்வியை பரிசாக தருவார்கள்“
- ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய, இனி பான் கார்டு செல்லாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது...பெயர் மாற்ற ஆவணங்கள் தொடர்பான புதிய நடைமுறை, இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- இந்தியாவில் ரயில் கட்டணம் மிக குறைந்த அளவிலேயே உள்ளதாக மக்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்... அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுவதாகவும், 17 ரயில் நிலையங்களில் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்...
- இண்டிகோ விமான இயக்கத்தையும், தொழில்நுட்ப பிரச்சினையும் சரி செய்ய முயற்சி செய்து வருவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது... 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது...
- இண்டிகோ பயணிகளுக்கு இழப்பீடு தொகையை வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?... கட்டண உயர்வுக்கு யார் காரணம் எனவும் மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது...
- 2030க்குள் இந்தியாவில் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது...ஏஐ உள்ளிட்ட துறைகளில் அமேசானின் முதலீட்டின் மூலம் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
- +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வரும் 19ம் தேதிக்குள் பெற வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது... தமிழைப் பயிற்று மொழியாக கொண்ட மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது