காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23-05-2025) | 11AM Headlines | Thanthi TV | Today Headlines
- பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்...
- அரபிக்கடலில் நிலவிய குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றது...
- பொறியியல் படிப்புகளில் சேர 16 நாட்களில், 2.26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்....
- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இரு மடங்கு மாணவர் சேர்க்கை அதிகரிப்பு...
- பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தகவல்..
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்தது...
- நகை கடனுக்கான புதிய விதிகளால் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்...
- பல்கலைகழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகார சட்டத்தை எதிர்த்த மனுவை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரும் தமிழக அரசு...
- மாஸ்கோ விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல் நடத்தியது உக்ரைன் ராணுவம்...
- பிரபல நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு...
- வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழக முழுவதும் 100 கோடி மேல் மோசடி என குற்றச்சாட்டு...
- ராமநாதபுரத்தில் 28 ஆண்டு காலம் இயங்கி வந்த இரும்பு பட்டறையை இடித்து தரைமட்டமாக்கிய மர்ம நபர்கள்....
- தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு...
- சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கேரளாவில் இருந்து புதுச்சேரி சென்ற சொகுசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து....
- ஈரோட்டில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டில் கொள்ளை முயற்சி...
- அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரசவித்த உடனே குழந்தையை கழிவறை கோப்பையில் திணித்து கொடூரமாக கொன்ற தாய்...
- மகாராஷ்டிரா மாநிலம் எவத்மாலில் கணவரை விஷம் வைத்து கொன்று மாணவர்கள் உதவியுடன் எரித்த பள்ளி தலைமை ஆசிரியர்...
- கர்நாடகாவில், பாலியல் வன்கொடுமை செய்ததாக துணை நடிகை புகார்....
- அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி...
- லண்டன் நீதிமன்றத்தின் கடைசிநேர ஒப்புதலால், இந்திய பெருங்கடலில் உள்ள சாகோஸ் தீவை மொரீசியசிடம் ஒப்படைக்க இங்கிலாந்து பிரதமர் ஒப்புதல்...
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருப்பு...
- கோலிவுட்டில் இன்று ஒரே நாளில் விஜய் சேதுபதியின் ஏஸ், யோகி பாபுவின் ஸ்கூல் உட்பட 7 திரைப்படங்கள் ரிலீஸ்...