டிடிவி தினகரன் காளைக்கு விஜயபாஸ்கர் தந்த சிறப்பு பரிசு... புதுக்கோட்டையில் நடந்த சுவாரசியம்

Update: 2023-03-08 05:21 GMT
  • புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளைக்கு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. அம்மன்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், டிடிவி தினகரன் பெயரில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளில் ஒன்று வெற்றி பெற்றது.
  • இதனை மேடையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது சார்பில் சைக்கிளை அக்காளைக்கு பரிசாக வழங்கினார். அரசியலை கடந்து நடந்த இந்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்