பைக்கில் அமர்ந்து கொண்டு லஞ்சம் கேட்ட போக்குவரத்து தலைமை காவலர் - வீடியோ வைரல் | traffic police

Update: 2022-11-20 05:35 GMT

புதுச்சேரியில் போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் பிரகாஷ். இவர் கடற்கரை அருகே உள்ள சாலையில் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது போக்குவரத்து காவலர் பிரகாஷ் என்பவர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து வாகன ஓட்டிகள் தட்டிக்கேட்டு வீடியோ எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது காவலர் பிரகாஷ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பிரகாஷின் விளக்க அறிக்கைக்கு பின்னர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்