கும்பக்கரை அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு... அடுத்த நொடியே வனத்துறையினர் செய்த செயல்
- மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் நீர்வரத்து சீராக இருந்த வந்தது.
- இந்நிலையில், இன்று மாலை திடீரென பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- அப்போது, அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் முன்னெச்சரிக்கையாக பத்திரமாக மீட்டனர்.
- இதனிடையே, நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.