உலகின் முதல் டிரைவர் இல்லா பஸ் ! | Scotland

Update: 2023-04-07 01:55 GMT

தொழில்நுட்ப வளர்ச்சியில் டிரைவர் இல்லா வாகனங்கள் கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் டிரைவர் இல்லா கார்கள் சில நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன. இப்போது முதல் முறையாக ஸ்கார்ட்லாந்தில் டிரைவர் இல்லாத பேருந்து அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. 33 பேர் பயணம் செய்யும் வகையிலான பேருந்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், எடின்பர்க் மற்றும் பைஃப் இடையே 14 மைல் தொலைவுக்கு சேவை தொடங்கவிருக்கிறது. இந்த பேருந்தில் தொழில்நுட்ப செயல்பாட்டை கண்காணிக்கவும், பயணிகள் ஏற, இறங்க உதவி செய்யவும் இரு பணியாளர்கள் அதில் இருப்பார்கள் என அந்நாட்டு போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரைவர் இல்லா பேருந்து சேவையால், மனித தவறால் நேரிடும் 90 சதவீத விபத்துக்கள் தடுக்கப்படும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்