மனைவியை பிரிந்து 2 இளைஞர்களுடன் உறவில் இருந்ததால் பறிபோன கணவன் உயிர்.. பின்னணியில் கூகுள் பே APP..!

திருப்பூரில் பனியன் நிறுவன மேலாளர் கொலை வழக்கில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-06 10:53 GMT

எடிசன் நகரில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயத்துடன் கிடப்பதாக வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அந்த நபரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற நிலையில், வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த நபர் துரைசாமி நகரை சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பதும், பனியன் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்ததும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், மனைவியை பிரிந்து வாழ்ந்த கோபி கிருஷ்ணனுக்கு தன்பாலீர்ப்பு பழக்கம் இருந்ததும், எடிசன் நகரில் இரண்டு இளைஞர்களிடம் தன்பாலீர்ப்பு உறவில் இருந்ததும் தெரியவந்தது. மேலும், கோபி கிருஷ்ணனனிடம் 17 ஆயிரம் ரூபாய் பணம் கேட்ட நிலையில், அதை கூகுல் பே மூலம் அனுப்பாதததால் ஆத்திரமடைந்த இருவரும், கோபி கிருஷ்ணனனை கொலை செய்தது கண்டறியப்பட்டது. இதனிடையே, தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில், பிள்ளையார்பட்டியில் பதுங்கி இருந்த மருதுபாண்டி, பரணிதரன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்