"இனிமேல் நான் எதுக்கு வாழனும்?" - "கணவனும் கொழுந்தனும் எனக்கு தொல்லை.." - ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய பெண்

Update: 2023-07-25 02:24 GMT

பணம், நகை கேட்டு கணவரும், அவருடைய தம்பியும் தொல்லை கொடுப்பதாக கூறி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்குடியைச் சேர்ந்த அமிர்தராஜ், சிங்கப்பூரில் தொழில் செய்து வரும் நிலையில், அவருடைய மனவி ஜெரோம் ஆரோக்கிய விமல், தேவகோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த தம்பி பீட்டருக்கு பணம் மற்றும் நகைகளைத் தரும்படி, அமிர்தராஜ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், ஜெரோமிடம் பணம் கேட்டு பீட்டர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, காரைக்குடியில் பதிவு செய்யப்பட்ட வழக்கை வழக்கை வாபஸ் பெறுமாறு கூறி, வீட்டுக்கு வர விடாமல் பீட்டர் தடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெரோம் ஆரோக்கிய விமல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஆண்டு இதேபோன்று கணவருடன் ஏற்பட்ட பிரச்னயால், ஜெரோம் ஆரோக்கிய விமல்15 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயன்றதால், தற்போது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்