9 மாணவர்களின் உயிரை பலி வாங்கிய சாலை விபத்து - விபத்தான பேருந்து குறித்து அதிர்ச்சி தகவல்

Update: 2022-10-06 11:20 GMT

9 மாணவர்களின் உயிரை பலி வாங்கிய சாலை விபத்து - விபத்தான பேருந்து குறித்து அதிர்ச்சி தகவல்

எர்ணாகுளத்தை சேர்ந்த தனியார் பள்ளியில் 5 ஆசிரியர்கள் மற்றும் 43 மாணவ, மாணவிகள் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

பாலக்காட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து முன்னே சென்ற அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதிவேகமாக சென்று மோதியதால், சுற்றுலா பேருந்தில் இருந்த 9 மாணவ, மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த நிலையில் விபத்திற்குள்ளான சுற்றுலா பேருந்து தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகவும், மோட்டார் வாகன பதிவேட்டில் கறுப்புப் பட்டியலில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பேருந்தில் ஏர் ஹாரன், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பேருந்து 97 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என அம்மாநில போக்குவரத்துறை அமைச்சர் அந்தோணி ராஜூ தெரிவித்துள்ளார்.

பயண விவரங்களை போக்குவரத்து துறைக்கு பள்ளி நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுற்றுலா பேருந்தின் ஓட்டுநர் ஜோஜோ பட்ரோஸை காணவில்லை என கூறப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்