மக்களவை தேர்தலை பிரதமர் மோடியின் தலைமையில் ஒருங்கிணைந்து சந்திப்போம் என, தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம், டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக உட்பட சுமார் 38 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில், மக்களவைத் தேர்தலை பிரதமர் மோடியின் தலைமையில் ஒருங்கிணைந்து, தேசிய ஜனநாயக கூட்டணி சந்திக்கும் எனவும், பிரதமர் மோடி அறுதி பெரும்பான்மையுடன் 3வது முறையாக பிரதமர் ஆவார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்மொழிய, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் தலைமையின் மீது நம்பிக்கை தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.