ஏழைகள் நல மாநாட்டில் விவசாயிகளுக்கு நல்ல செய்தி சொன்ன பிரதமர் மோடி

சிம்லாவில் நடைபெறும் ஏழைகள் நல மாநாட்டில் பிரதமர் மோடி

Update: 2022-05-31 07:34 GMT

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க 11வது தவணையை விடுவிக்கிறார் பிரதமர் மோடி

மோதி அரசின் 8 ஆண்டு நிறைவு, இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் ஏழைகள் மாநாட்டில் இன்று காலை 11 மணிக்கு பங்கேற்கிறார் பிரதமர் மோடி.

மோதி அரசின் 08 ஆண்டுகள் நிறைவையடுத்து நாடு முழுவதும் ஏழைகள் நல மாநாட்டிற்கு ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையிலான அரசின் 08 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் இந்தப் புதுமையான பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகரங்கள், மாவட்ட தலைமையிடங்கள், விவசாய அறிவியல் மையங்கள் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி கருத்துக்களைப் பெறும் முயற்சியாக நாடு முழுவதும் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், ஆகியோர் அவரவர்க்குரிய இடங்களிலிருந்து பொதுமக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடும் ஏழைகள் நல மாநாடு காலை 09:45 மணிக்கு தொடங்குகிறது.

காலை 11:00 மணிக்கு இந்த நிகழ்ச்சியில் இணையும் பிரதமர் மத்திய அரசின் ஒன்பது அமைச்சகங்கள் / துறைகளின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடுவார்.

மேலும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 11-வது தவணையை பிரதமர் இன்று விடுவிக்கிறார்.

இதன் மூலம் 10 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.21,000 கோடி நேரடி பரிமாற்றம் செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்