PAK vs NZ : அதிரடி காட்டிய கிளென் பிலிப்ஸ்.. நியூசிலாந்து அபார வெற்றி..!

Update: 2023-01-14 05:20 GMT

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி பெற்றது.

கராச்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் சேர்த்தது.

தொடக்க வீரர் ஃபஹர் சமான் சதம் விளாசினார்.

பின்னர் 281 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து, 8 விக்கெட் இழப்புக்கு 49வது ஓவரில் இலக்கை எட்டியது.

நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் அதிரடி அரைசதம் அடித்து வெற்றிக்கு அடித்தளமிட்டார்.

இதன்மூலம் 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

மேலும், பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை நியூசிலாந்து வென்றுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்