அதிமுக சட்டமன்ற குழு விவகாரம் : ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பிடம் விளக்கம் கேட்க முடிவு
அதிமுக சட்டமன்ற குழு விவகாரம் தொடர்பாக, ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பின் விளக்கம் கேட்ட பிறகு, சபாநாயகர் இறுதி முடிவு எடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேர் நீக்கம் குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவைக்கு கடிதம் எழுதியுள்ளது. அதேபோல் ஓபிஎஸ் தரப்பு சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில், அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றக் கூடாது எனவும் பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலவையில் இருப்பதால் மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு தரப்பிடம் விளக்கம் கேட்க சபாநாயகர் முடிவு செய்துள்ளார். இரு தரப்பு விளக்கத்தை கேட்ட பிறகு சபாநாயகர் இறுதி முடிவு எடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.