மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஒரே நாளில் 70 திருமணங்கள் நடைபெற்றன. பதிவு செய்தவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முகூர்த்த நாளான இன்றைய தினம் திருமண வீட்டார் மட்டுமின்றி ஏராளமான பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வந்ததால், சுப்பிரமணியசுவாமி கோயில் திருவிழாக் கோலம் பூண்டது.