ஒருமித்த பாலுறவுக்கான வயது வரம்பை 18ல் இருந்து 16 ஆக குறைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் பரிந்துரை

Update: 2022-11-11 11:57 GMT

ஒருமித்த பாலுறவுக்கான வயது வரம்பை 18 - ல் இருந்து 16 ஆக குறைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் சட்ட ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. நாளுக்கு நாள் போக்சோ வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகளில் போக்சோ, மற்றும் ஐபிசி சட்டங்கள் குறித்து கற்பிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.பசவராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு ஒருமித்த பாலியல் உறவுக்கான வயதை 18 இலிருந்து 16 ஆக குறைப்பது குறித்து பரிசீலனை செய்ய சட்ட ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்