பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் எதிர்கட்சிகளுக்கான கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்.
ஜூன் 12-ம் தேதி திட்டமிடப்பட்ட எதிர்க்கட்சிகள் கூட்டம் இப்போது ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, என்சிபி தலைவர் சரத் பவார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.