"ஏகப்பட்ட உயிர்களை சுமந்துட்டு போறோம்.." பள்ளி,கல்லூரி டிரைவர்களுக்கு அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகளின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், கல்வி அலுவலர் சக்கில் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். இதில் விதிமுறைகளை பின்பற்றி வாகனங்கள் பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.