வீட்டிற்குள் பாம்பு வந்துவிட்டால் முதலில் இதை செய்யுங்க..! | snake | Northeast Monsoon | rain

Update: 2022-11-15 02:51 GMT

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாங்காடு, பூந்தமல்லி, முகலிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில், முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. இதில், பாம்பு, பூச்சி உள்ளிட்ட விஷ சந்துக்கள் குடியிருப்புக்குள் புகுந்த நிலையில், கட்டுவிரியன், சாரை பாம்பு, நல்ல பாம்பு ஆகியவற்றை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். இது போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் நுழைந்தால், வனத்துறைக்கு 044-222 00 335 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்