"இந்து முறைப்படிதான் திருமணம் செய்வேன்"... அடம்பிடித்த அமெரிக்கா மாப்பிள்ளை...

Update: 2022-08-06 11:03 GMT

திருப்பதியைச் சேர்ந்த ஹர்ஷவி அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு பொது மேலாளராக பணியாற்றும் அமெரிக்காவை சேர்ந்த டொமியன் பிராங்க் என்பவருடன் உண்டான நட்பு பின்னாளில் காதலாக மாறியுள்ளது... இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, அமெரிக்க மாப்பிள்ளை தான் இந்து முறைப்படி தான் திருமணம் முடிப்பேன் என்று அடம் பிடித்துள்ளார்... அவரது விருப்பப்படியே நேற்று இரவு திருப்பதியில் உள்ள விடுதி ஒன்றில் ஹர்ஷவி - டொமியன் ஃப்ராங்க் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது... இரு வீட்டாரும் மணமக்களை வாழ்த்தி மகிழ்ச்சி அடைந்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்