"அதிமுக கொடி நீங்க எப்படி யூஸ் பண்ணலாம்".. OPS,EPS அணி இடையே முற்றிய மோதல் - சேலத்தில் பரபரப்பு

Update: 2023-05-19 11:20 GMT

சேலம் தனியார் மண்டபத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் அதிமுக கட்சி கொடிக்கம்பம், பேனர் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. அப்போது அங்கு வந்த அதிமுக நிர்வாகிகள், அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அதிமுக கொடியை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் சேலம் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்