முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் இளைய சகோதரி சாருமதி, உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு சாருமதி காலமானார்.
சாருமதியின் இறுதிச்சடங்கு இன்று மதியம் 3 மணியளவில், சென்னை எழும்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.