திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஜாமின் நிராகரிப்பு

Update: 2023-07-12 01:40 GMT

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டாவது முறையாக ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.

திமுக தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு ஆளுநர் ரவி, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக கொடுங்கையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி இரண்டாவது முறையாக, ஜாமின் கோரி, தாக்கல் செய்த மனு சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அல்லி, சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஏற்கனவே மூன்று வழக்குகள் உள்ளதாக கூறி, அவரது இரண்டாவது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்